search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் வன்முறை"

    கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
     
    இந்நிலையில், கொல்கத்தாவின் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இன்று காலை 11.30 மணியளவில் மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம்  விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடியது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

    இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்தனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இன்று மாலை நிலவரப்படி தேர்தல் சார்ந்த மோதல்களில் 12 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக பகிரப்பட்டதை கண்ட சில வக்கீல்கள் அந்த காட்சிகளை தங்களது கைபேசி மூலம் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் வக்கீல்கள் யாராவது இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சாரியா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

    மனுதாரர்களின் புகார்கள் தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலாளர் மற்றும் அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  #Panchayatpolls #violence
    ×